Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். கணவனை கைது செய்தமை தொடர்பில் மனைவி முறைப்பாடு

பிப்ரவரி 19, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தனது கணவனை களவு குற்றச்சாட்டொன்றில் கைது செய்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர் எனவும், கைது செய்யப்பட்டவர் மீது சித்திரவதைகளை புரிந்துள்ளதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

அது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவிக்கையில்,

கடந்த 14ஆம் திகதி வீடு ஒன்றில் களவு ஒன்று இடம்பெற்றதாக அது தொடர்பில் விசாரிக்க வேண்டும் என எனது கணவர் உள்ளிட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் இருவரின் கைது விவரம் தொடர்பில் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட போதும் எனது கணவர் தொடர்பில் பொலிசார் தகவல் வழங்க மறுத்தனர்.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்து மூன்று நாட்களின் பின் 17ஆம் திகதியே அறிந்து அங்கு சென்ற போது, எனது கணவர் மீது போலீசார் சித்திரவதை மேற்கொண்டு தாக்குதல்களையும் மேற்கொண்டதால், உடலில் இரத்த தழும்புகள் காணப்படுவதுடன் அவர் எழுந்து நடக்க முடியாத நிலையில் காணப்பட்டார்.

என்ன குற்றச்சாட்டில் எனது கணவரை கைது செய்தீர்கள் ? என கேட்ட போது, களவு குற்றச்சாட்டு என பதில் அளித்தனர்.

எங்கே களவு போனது ? களவு போனமை தொடர்பிலான முறைப்பாடு உள்ளதா ? 14ஆம் திகதி கைது செய்த கணவனை 17ஆம் திகதியே கைது செய்துள்ளதாக என்னிடம் கூறியுள்ளீர்கள் ? மூன்று நாட்களாக எனது கணவர் தொடர்பிலான தகவல்களை ஏன் கூறவில்லை என பொலிசாரிடம் தொடர்ந்து கேள்வி கேட்ட போது , கணவரின் உடைமையில் இருந்து ஐஸ் போதைப்பொருளை மீட்டோம். வேறு எதுவும் கதைக்க வேண்டும் எனில் நீதிமன்றில் கதை என என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் நேற்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டி முற்படுத்தினர் வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைத்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளேன் என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றம்
அடுத்த செய்தி லாஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு தண்டம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அமைச்சர் சந்திரசேகரை சபையில் சாடிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ….

மார்ச் 7, 2025
இலங்கை

இலங்கையில் வாகன விற்பனையில் வீழ்ச்சி!

அக்டோபர் 7, 2025
இலங்கை

வவுனியாவில் வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கி பணம் பறிப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?