அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் கலிபோர்னியாவை அடுத்த கோச்செல்லாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். குறித்த கூட்டத்தில் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை ரிவர்சைடு கவுண்டி ஷெரிப் அலுவலகம் உறுதுப்படுத்தி உள்ளது. பேரணியில் கலந்து கொண்ட எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ள அதேவேளை கைதுசெய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாக FBI தெரிவித்துள்ளது.