இலங்கை அரச கிளவுட் (Lanka Government Cloud – LGC) சேவையில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் இயக்கப்படும் இணைய சேவைகளில் தற்காலிக இடையூறுகள் தொடர்வதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக சான்றிதழ்களின் நகல்களைப் பெறுவது உள்ள தாக்கம் செலுத்தக்கூடிய சேவைகளுக்கான மாற்றி வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
