தென்னிந்திய தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் மனோஜ் பாரதிராஜா. இயக்குனர் பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். குறித்த செய்தி திரை உலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.