ஐபிஎல் தொடரானது அனைத்து விளையாட்டு இரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்படும் ஒரு போட்டியாகும். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக 2017 ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இலங்கை அணி வீரரான மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் தலைமையிலான இந்த அணி வெற்றியும் பெற்றது. பின்னர் இவரை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் உலகளாவிய தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வந்தது.
அடுத்த போட்டிகளில் மும்பை அணியின் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் செயற்பட்டார். மும்பை அணி நடந்து முடிந்த போட்டியில் இறுதி இடத்தை பெற்றது.
இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது. மீண்டும் மும்பை அணியின் பயிற்சியாளராக மஹேல ஜெயவர்த்தனவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.