அமெரிக்காவின் நிவ்யோர்க் பகுதியில் காணாமல் போன சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நிவ்யோர்க்கிலுள்ள Lake George பகுதியில் வசித்து வந்த கனேடியரான லூசியானோ (Luciano Frattolin, 45), என்பவரின் மகளே இவ்வாறு சடலமாக கண்டெக்கப்பட்டுள்ளார்.
மெலினா (Melina Frattolin, 9) என்ற சிறுமி சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில் காணாமல் போயுள்ளதுடன், இவரை காணவில்லை என தந்தை லூசியானோ பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.
இந்நிலையில் கிடைக்கப்பெற்ற புகாருக்கு அமைய தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிஸார் Ticonderoga இடத்தில் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி பொலிஸார் எவ்வித தகவலும் வெளியிடவில்லை.
