அமெரிக்க சுற்றுலா வணிக நிறுவனங்கள், கனேடியப் பயணிகளை மீண்டும் ஈர்க்கும் வகையில் சிறப்புச் சலுகைகளை வழங்கி வருகின்றன.
அமெரிக்காவுக்கு வரும் கனேடியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அமெரிக்காவுக்கு செல்லும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் கனேடியர்கள் பாரிய பங்கை வகித்து வந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்குச் சென்ற கனேடிய சுர்றுலாப் பயணிகள் $20.5 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளனர்.
ஏப்ரல் மாத நிலவரப்படி, கனேடியர்களின் அமெரிக்காவுக்கான விமானப் பயணம் கிட்டத்தட்ட 20% குறைந்துள்ளது.
அதேவேளை, தரைவழிப் பயணம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 35% க்கும் அதிகமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.