கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் மாகாணத்தில் கடல் உணவு சந்தைப்படுத்தலுக்கான புதிய ஆதரவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த மாகாணத்தின் மீன்பிடி, வனத்துறை மற்றும் விவசாயத்துறை அமைச்சரான ஜெர்ரி பைர்ன் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இத்திட்டமானது கனடிய உற்பத்திகளை உலகளாவிய சந்தைகளுக்கு எடுத்துச்செல்லும் மூலோபாயத்துக்கு அமைவாக விளங்குகிறது.
அமெரிக்காவிலிருந்து வரும் வரிசார் அச்சுறுத்தல்கள் மற்றும் சீனாவிலிருந்து வரும் சமீபத்திய வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, நியூஃபவுண்ட்லேண்ட் மாகாணத்தின் கடல் உணவு சந்தைப்படுத்தலுக்கான இந்த திட்டம் செயற்படவுள்ளது.
இதன்மூலம் புதிய சந்தை வாய்ப்புகளை அடையாளம் காணவும், மதிப்பிடவும், இலக்கு வைக்கவும், மேம்படுத்தவும் முடியுமென நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.