Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மைக்கேல் ரூசோ பதவி விலகுதல் தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை – நாடாளுமன்றக் குழு

ஏப்ரல் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஏர் கனடா (Air Canada) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ரூசோ (Michael Rousseau), பதவி விலகும் முன்பாக நாடாளுமன்றத்தில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு மொன்றியலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய மைக்கேல் ரூசோ, தான் மொன்றியலில் 15 ஆண்டுகளாக வசித்த போதிலும் தனக்கு பிரெஞ்சு மொழி பேசத் தெரியாது என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து கியூபெக் மாகாணத்தின் கலாசாரம் மற்றும் மொழியை அவர் அவமதித்துவிட்டதாகக் கூறி, மாகாணம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இதனைத் தொடர்ந்து, அவர் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதாகத் தெரிவித்து, பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.

நாட்டின் சட்டப்படி, ஏர் கனடா போன்ற மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் சேவைகளை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியலைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைவர், அங்கிருக்கும் பெரும்பான்மை மக்களின் மொழியைத் தெரியாது என்று கூறியது கியூபெக் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்போது, ஏர் கனடா (Air Canada) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ரூசோ எதிர்வரும் மே மாதம் 31-ஆம் திகதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில், அவர் வெளியேறுவதற்கு முன்பாக பிரெஞ்சு மொழி கற்றலில் அவரது முன்னேற்றம் குறித்து நாடாளுமன்ற உத்தியோகபூர்வ மொழிகள் குழுவிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என பிளாக் கியூபெக்வா (Bloc Québécois) கட்சி கோரிக்கை விடுத்தது.

ஆனால், நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்.

ரூசோ விரைவில் ஓய்வு பெறவுள்ளதால், அவரை அழைப்பது கால விரயம் என்றும், அவருக்குப் பதிலாகப் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை அழைத்து நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களைக் கேட்பதே சிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
அடுத்த செய்தி மொன்றியல் சட்டவிரோத வீதிப் பந்தய விபத்தில் இளைஞரொருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

தென் அல்பெர்டாவில் 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு

ஜூலை 6, 2025
கனடாமுதன்மை செய்தி

மார்க்கார்னியின் முதல் செய்தியாளர் சந்திப்பு ஒட்டாவாவில்

மே 2, 2025
கனடா

கனடிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் கனடியத் தூதுக்குழுவினர்

டிசம்பர் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் உயிரிழந்த குழந்தை சம்பவம் – பெண் ஒருவர் கைது!

அக்டோபர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?