கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா ஆர்யா தேர்தலில் போட்டியிட லிபரல் கட்சி தடை விதித்தது
எதனால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது என்பதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமலே அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், சந்திரா ஆர்யா தேர்தலில் போட்டியிட லிபரல் கட்சி தடை விதித்தமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
அந்தவகையில் ஆர்யா இந்திய அரசுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுவதாலேயே தேர்தலில் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்யா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா சென்றதாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், ஆர்யா தனது பயணம் குறித்து கனடா அரசுக்கு தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அவருக்கு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது