கனேடியப் பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான Mark Carney ஐ இலக்குவைத்து சீனாவுடன் தொடர்புடைய இணையவழிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் பொதுத்தேர்தல் நிகழவுள்ள இக்காலப்பகுதியில் இங்கு வாழும் சீனசமூகங்களின் மத்தியில் கருத்துச் செல்வாக்கினை உருவாக்கும் நோக்குடன் இந்த இணையவழிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சீன அரசாங்கத்திற்கும் இந்த இணையவழிச் செயற்பாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக, கனேடிய
பாதுகாப்பு வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன. WeChat எனப்படும் சமூகவலைத்தளத்திலேயே குறித்த செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன,சீனாவின் பொதுவுடைமைக்கட்சியின் அரசியல் மற்றும் சட்ட விவகார ஆணைக்குழுவிற்கும் Mark Carney ஐ இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் இணையவழிச் செயற்பாடுகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக, புலனாய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
