இந்த விவகாரத்தை கனடாவின் குற்றவியல் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் லியா கசானின் முயற்சிக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
Residential School முறையால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பங்களையும் வெறுப்புப் பேச்சுகளிலிருந்து பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என லியா கசான் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக அவர் அறிமுகப்படுத்திய Bill C-254 என்ற சட்டமூலம், தனிப்பட்ட உரையாடல்களுக்கு வெளியே, கனடாவின் Residential School முறையை ஆதரிப்பது, மறுப்பது, நியாயப்படுத்துவது அல்லது அதன் பாதிப்புகளைக் குறைத்துக் காட்டுவது போன்ற செயல்களைச் சட்டவிரோதமாக்க முன்மொழிகிறது.
இந்தச் சட்டமூலம் முதன்முதலில் 2024ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அது காலாவதியான நிலையில், அதே ஆண்டு அக்டோபரில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
கனடாவின் பழங்குடியின மக்களின் மொழி, கலாசாரம் மற்றும் குடும்ப உறவுகளைப் பாதித்த Residential School வரலாறு தொடர்பாக, வரலாற்று உண்மைகளைப் பாதுகாப்பதற்கும் கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதற்கும் இடையிலான விவாதம் தற்போது அரசியல் மட்டத்தில் கவனம் பெற்றுள்ளது.
