மொன்றியலின் தெற்குப் கரைப் பகுதி (South Shore) முழுவதிலும் உள்ள நகராட்சித் தலைவர்கள், பொதுப் போக்குவரத்தில் மாற்றங்களைக் கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தங்கள் பிராந்தியத்திற்குச் சிறந்த உள்ளூர் மற்றும் கிழக்கு – மேற்கு இணைப்புகளும், அதிக நம்பிக்கையான சேவையும், நகராட்சிகளால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான நிதி மாதிரியும் தேவை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
‘Autorité régionale de transport métropolitain’ (ARTM) அமைப்பிற்கு நகராட்சிகள் வழங்கும் சராசரி நிதிப்பங்களிப்பு, 2026 முதல் 2029 வரை 215 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘Roussillon MRC’ அமைப்பின் தலைவரான மெர்சியர் (Mercier) மேயர் லிஸ் மிச்சாவ்ட் (Lise Michaud) கூறுகையில், போதுமான நடைமுறைச் செயல்பாடுகளைக் காணாமல் நகராட்சிகள் பல ஆண்டுகளாகப் பொதுப் போக்குவரத்து குறித்த கவலைகளை எழுப்பி வருகின்றன என்றார்.


