Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

பிரெஞ்சு மொழியின் பயன்பாட்டை மதிப்பிட, கியூபெக் புள்ளிவிபரவியல் நிறுவனத்தால் விசேட வினாக்கொத்து வெளியீடு

ஜூன் 5, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக் புள்ளிவிபரவியல் நிறுவனத்தினால் (Institut de la statistique du Québec – ISQ) 2026ஆம் ஆண்டுக்கான விசேட மொழி ஆய்வு வினாக்கொத்து வெளியிடப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் தீவிர ஆய்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கியூபெக் மாகாணத்தில் உத்தியோகபூர்வ மொழியான பிரெஞ்சு (French) மற்றும் ஆங்கில (English) மொழிகளின் தற்போதைய பயன்பாட்டு நிலை, மக்களின் மொழிவிருப்புரிமை மற்றும் அன்றாடத் தொடர்பாடல் பழக்கவழக்கங்கள் குறித்த துல்லியமான தரவுகளைத் திரட்டும் நோக்கிலேயே, இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கியூபெக் மாகாண அரசினால் அண்மையில் கொண்டுவரப்பட்ட ‘பில் 96’ உள்ளிட்ட கடுமையான மொழிச் சட்டங்களுக்கு மத்தியிலும், பொது நிர்வாக இணையத்தளங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்தே இந்த அதிரடித் தரவுச் சேகரிப்பு ஆரம்பமாகியுள்ளது.

கியூபெக் மாகாணத்தின் கலாசார மற்றும் நிர்வாக அடையாளமாக விளங்கும் பிரெஞ்சு மொழியின் வீழ்ச்சியைத் தடுத்து, அதன் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக மாகாண அரசு பல்வேறு சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், மக்களின் உண்மையான மொழிப் பயன்பாட்டை மதிப்பிடுவதற்காகத் தெரிவு செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு இந்த 2026ஆம் ஆண்டுக்கான மொழி ஆய்வுப் படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 15 நிமிடங்களில் பூர்த்தி செய்யக்கூடிய இந்த வினாக்கொத்தின் மூலம், குடியிருப்பாளர்கள் தங்களின் வீடுகள், பணியிடங்கள், நண்பர்களுடனான உரையாடல்கள் மற்றும் இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற பொழுதுபோக்குத் தளங்களில் எந்தெந்த மொழிகளை முதன்மையாகப் பயன்படுத்துகின்றனர் என்ற விபரங்கள் முழுமையாகத் திரட்டப்படுகின்றன.

இந்த ஆய்வில் பங்கேற்பது முற்றிலும் தன்னார்வ அடிப்படையிலானது (Voluntary) எனினும், மாகாணத்தின் எதிர்கால மொழிக் கொள்கைகளைத் தீர்மானிக்க நுகர்வோரின் துல்லியமான பதில்கள் அவசியமானவை என கியூபெக் புள்ளிவிபரவியல் நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் கியூபெக்கின் மொழி உத்தியோகபூர்வ கண்காணிப்பகம் (Office québécois de la langue française – OQLF) வெளியிட்டுள்ள ஆய்வுத் தரவுகளின்படி, மாகாணத்தின் மொழிப் பயன்பாட்டில் சில முக்கிய மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

18 முதல் 34 வயதுக்கு இடைப்பட்ட இளைய கியூபெக் குடியிருப்பாளர்களில் 41 சதவீதமானோர், வணிக நிறுவனங்களில் தங்களுக்குப் பிரெஞ்சு மொழிக்கு மாற்றாக வேறு மொழிகளில் சேவையாற்றப்படும் போது அது குறித்து எவ்வித ஆட்சேபனையும் இன்றி அலட்சியமாக (Indifferent) இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 35 வயதிற்கு மேற்பட்டோரிடம் இந்நிலை 30 சதவீதமாகக் காணப்படுகிறது. மொன்றியல் தீவு (Island of Montreal) மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில்
வணிகத் தளங்களில் பிரெஞ்சு மொழியில் சேவை பெற விரும்பும் வாடிக்கையாளர்களின் விகிதம், கடந்த 2010ஆம் ஆண்டில் 74.3 சதவீதமாக இருந்த நிலையில், அண்மைய புள்ளிவிவரங்களின்படி அது 67.8 சதவீதமாகக் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் யூதவழிபாட்டுத் தலம் மீது தீவைப்பு முயற்சி – சந்தேக நபர் கைது.
அடுத்த செய்தி பல்சர்(Pulsar) நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் லோயிக் கோர்டெல் பதவிநீக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

சர்வதேச பாதுகாப்பு வங்கியினை அமைப்பதற்கு மொன்றியலை விட டொரண்டோவே தகுதியான இடம்-‘டக் ஃபோர்ட்’

மே 13, 2026
கியூபெக்முதன்மை செய்தி

செயின்ட் லோரன்ஸ் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம்

ஆகஸ்ட் 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அசாத் மௌளானாவிற்கு வேலை வழங்கியதாக டக்ளஸ் தெரிவிப்பு!

செப்டம்பர் 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் விவசாயிகளுக்கு அரச காணிகளை பங்கீடு செய்ய வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

மே 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?