Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் யூதவழிபாட்டுத் தலம் மீது தீவைப்பு முயற்சி – சந்தேக நபர் கைது.

ஜூன் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் தீவின் வெஸ்ட்மவுண்ட் (Westmount) பிராந்தியத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற யூத வழிபாட்டுத் தலமான (Synagogue) Temple Emanu-El-Beth Sholom’ மீது நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட தீவைப்பு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் உடனடிச் சமிக்ஞை மற்றும் துரித உதவியுடன், இக்குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் சம்பவ இடத்திற்கு அருகிலேயே வைத்து மொன்றியல் காவல்துறையினரால் (SPVM) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெஸ்ட்மவுண்ட் பிராந்தியத்தின் ஷெர்புரூக் வீதி மேற்கு (Sherbrooke Street West) மற்றும் வுட் அவென்யூ (Wood Avenue) சந்திப்பிற்கு அருகில் அமைந்துள்ள இந்த யூத வழிபாட்டுத் தலத்தில், நள்ளிரவு 12:15 மணியளவில் நபர் ஒருவர் தீ வைக்க முயல்வதாக அவசரக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த மொன்றியல் காவல்துறையினர், வெஸ்ட்மவுண்ட் பொதுப் பாதுகாப்பு அதிகாரிகளின் (Public Safety Officers)  உதவியுடனும், அங்கிருந்த சாட்சிகளின் துல்லியமான வழிகாட்டுதலுடனும், தப்பி ஓட முயன்ற சந்தேக நபரைச் சாமர்த்தியமாகக் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, சந்தேக நபர் வழிபாட்டுத் தலத்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, உட்புறமாகத் தீயைப் பரப்பும் நோக்குடன் உள்ளே நுழைந்துள்ளார். சம்பவ இடத்திலிருந்து தீப்பற்ற வைக்கப் பயன்படுத்தப்படும் எரியூட்டும்பொருட்கள் (Incendiary Materials) சிலவற்றைக் காவல்துறையினர்
மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் நடந்த வேளையில் வழிபாட்டுத் தலத்தினுள்ளே எவரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்களோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் (Firefighters), தீ மேலும் பரவாமல் உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்தனர். இதன் காரணமாக யூத வழிபாட்டுத் தல கட்டிடத்தின் உட்புறத்திற்குப் பெரும் சேதங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதுடன், சிறிய அளவிலான சேதங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மொன்றியல் காவல்துறையின் தீவைப்பு ஒழிப்பு விசேட பிரிவு (SPVM Arson Squad) உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளதுடன், சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முந்தைய செய்தி மொன்றியல் ஒலிம்பிக் மைதானத்தைப் புதுப்பிக்க 500 மில்லியன் டொலர் நிதி கோரிக்கை.
அடுத்த செய்தி பிரெஞ்சு மொழியின் பயன்பாட்டை மதிப்பிட, கியூபெக் புள்ளிவிபரவியல் நிறுவனத்தால் விசேட வினாக்கொத்து வெளியீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஆட்சி மாறினாலும் இனவாத அரசியல் தொடர்கிறது – பா.உ.சிறீதரன் குற்றச்சாட்டு

ஜூன் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வரலாற்றில் முதன்முறையாக டின் மீன்களை ஏற்றுமதி செய்த இலங்கை !

மார்ச் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கடலுக்குச் சென்ற 2 மீனவர்களை காணவில்லை

மார்ச் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களுக்கு உதவி செய்ய உருவாக்கப்பட்ட பதவிகளில் உபத்திரங்களையே செய்கின்றனர் – நா.வேதநாயகன்

மார்ச் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?