உமந்தாவ பௌத்த கிராமம் மற்றும் ஶ்ரீ சதகம் ஆசிரம குழுவினரின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம் நெடுந்தீவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
நெடுந்தீவு மாவலித்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 350 பாடசாலை மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர்.
கலந்து கொண்ட மாணவர்களுக்கான புதுவருட ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மதிய உணவுடன் மாணவர்களுக்கிடையே புதுவருட விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் உமந்தாவ குளோபல் பௌத்த கிராமத்தின் ஸ்ரீ சமந்தபத்ர அரஹத் தேரர், நயினாதீவு விகாராதிபதி, நெடுந்தீவு பிரதேச செயலாளர் கடற்படையினர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்து சிறப்பித்திருந்தனர்.