எலன் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா அரசாங்கம் வழங்கிய அனைத்து சலுகைகளையும் நிறுத்தி உள்ளது.
அதன்படி டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா வழங்கிய 43 மில்லியன் டாலர் தள்ளுபடி தொகையை கனடா நிறுத்தி வைத்துள்ளது.
அதோடு மின்சார வாகனங்களுக்கான தள்ளுபடித் திட்டங்களில் இருந்து டெஸ்லா நிறுவனத்தை ஒதுக்கி வைத்துள்ளதாகவும் கனடா போக்குவரத்து துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கோரிக்கையும் தனித்தனியாக ஆராயப்பட்டு சரிபார்க்கப்படும் வரை டெஸ்லா நிறுவனத்திற்கு எந்த தள்ளுபடி தொகையும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏப்ரல் 28ஆம் திக தி கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக பிரச்சனைகள் காரணமாக வாடகை டாக்ஸிகள் அல்லது சவாரி பகிர்வு நிறுவனங்கள் டெஸ்லா கார்களை வாங்குவதற்கு ஒன்டாரியோ மாகாணம் நிதிச் சலுகை வழங்குவதையும் நிறுத்தியுள்ளது
அமெரிக்காவுடனான கனடாவின் உறவு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த அறிவிப்பு குறித்து டெஸ்லா நிறுவனம் எவ்விதமான பதிலும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
