Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பழங்குடியினத் தலைவர்கள்

பிப்ரவரி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசு தன்னச்சையாகத் தனது அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கியூபெக்-லாப்ரடார் பழங்குடியினத் தலைவர்களின் சம்மேளனம் (AFNQL) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த மண்ணின் பூர்வகுடி மக்களான எங்களின் அனுமதியின்றி கியூபெக் தன்னை ஒரு தனி நாடாகவோ அல்லது பிரெஞ்சு மொழியை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாகவோ அறிவிக்க முடியாது" என அவர்கள் முழங்கியுள்ளனர்.

கியூபெக் மாகாணத்தை ஆளும் சி.ஏ.க்யூ (CAQ) அரசு, அண்மையில் கனடிய அரசியலமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதன்படி, கியூபெக் ஒரு "தேசம்" என்றும், அங்கு பிரெஞ்சு மொழி மட்டுமே அதிகாரப்பூர்வ மொழி என்றும் அறிவித்தது.

இதனை எதிர்த்தே தற்போது 43 பழங்குடியின சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஐரோப்பியர்கள் இந்த மண்ணிற்கு வருவதற்கு முன்பே தாங்கள் இங்கு வாழ்ந்து வருவதாகவும் தங்களைக் கலந்தாலோசிக்காமல் மாகாண அரசு முடிவுகளை எடுப்பது தங்களை அடிமைப்படுத்துவதற்குச் சமம் என பழங்குடியினத் தலைவரான கிஸ்லைன் பிகார்ட் (Ghislain Picard) தெரிவித்துள்ளார்.

கியூபெக்கின் கடும் மொழிச் சட்டமான 'பில் 96' காரணமாக, பழங்குடியின மாணவர்கள் பிரெஞ்சு மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது எனவும் இது அவர்களின் பாரம்பரிய மொழிகளுக்கும், கல்வி வளர்ச்சிக்கும் தடையாக இருப்பதாகவும் பழங்குடியினங்களைச்
சேர்ந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பழங்குடியின உரிமைகள் பிரகடனத்தின்படி (UNDRIP), பூர்வகுடி மக்களின் நிலம் சார்ந்த முடிவுகளில் அவர்களின் முழுமையான சம்மதம் இன்றி எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பில் கருத்துரைத்த, கியூபெக் நீதித்துறை அமைச்சர் ஜீன்-பிரான்சுவா ரோபெர்ஜ், தனது அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்ள கியூபெக்குக்கு முழு உரிமை உண்டு என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி 16 வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க உணவுப் பொருட்களை புறக்கணிக்குமாறு கோரிக்கை வைத்த கனடா.

பிப்ரவரி 3, 2025
உலகம்முதன்மை செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி.

ஆகஸ்ட் 22, 2024
கனடாமுதன்மை செய்தி

அல்பேட்டா மாகாணத்தின் தற்காலிக தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் சுனில் சூக்ராம் நியமனம்

ஏப்ரல் 18, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் சுதந்திரம் பெற்றால் வறுமையடையும் – பாப்லோ ரொட்ரிகஸ் எச்சரிக்கை

அக்டோபர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?