Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

இலங்கை தமிழர் பிரச்சினை – பொதுவாக்கெடுப்பு நடத்துமாறு விஜய் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்

மார்ச் 28, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உட்பட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

உறுதிமொழியோடு தொடங்கிய கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2,100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கட்சி தொடங்கப்பட்ட பின்பு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன

பொதுக்குழு கூட்டத்தில், மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும்,

இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்,

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தேவையில்லை, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு , மீனவர்கள் போராட்டத்துக்கு தீர்வு, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,

சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் என்பன உள்பட மொத்த 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறித்த 17 தீர்மானங்களும்

1- இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்

2 – மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.

3 – பரந்தூரில் புதிய விமானம் நிலையம் அமைக்கக் கூடாது.

4 – இருமொழிக்கொள்கையில் உறுதி

5 – நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை

6 – மாநில அரசுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

7 – பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க , சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.

8 – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.

9 – சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்காரணமான கையாலாகாத தி.மு.க அரசுக்குக் கண்டனம்

10 – டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணி நடத்தப்பட வேண்டும்.

11 – சமூக நீதியை நிலைநிறுத்த. சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.

12 – இலங்கைத் தமிழர் பிரச்னைக்குப் பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு

13 – பன்னாட்டு அரங்கிற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக.

14 – கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்

15 – தலைவருக்கே முழு அதிகாரம்:

16 – கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்:

17 – கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல்வீரர்களுக்கு இரங்கல்

முந்தைய செய்தி பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்பட அறிவிப்பு வெளியானது !
அடுத்த செய்தி டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா வழங்கிய அனைத்து சலுகைகளும் நிறுத்தபட்டது …

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் பலி

ஜூலை 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அரசாங்கத்தினால் விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது

ஜூன் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மடு கல்வி வலய மாணவர்களுக்கு கௌரவிப்பு

மார்ச் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் போயா தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

ஆகஸ்ட் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?