Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பொலிஸ் அதிகாரி முகமது லமினின் நினைவு ஊர்வல நிகழ்வுகள்

ஜூலை 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் (Montreal) நகரில் கடந்த மாதம் கடமையின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் அதிகாரி முகமது லமின் பென்ரெடோவானின் (Mohamed Lamine Benredouane) நினைவாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் வீதிகளில் அணிவகுத்து நின்று தங்களின் கண்ணீர் அஞ்சலியையும் வீரவணக்கத்தையும் செலுத்தியுள்ளனர்.

மொன்றியால் பொலிஸ் திணைக்களத்தின் 34 வயதுடைய அதிகாரி முகமது லமின் பென்ரெடோவானின் உத்தியோகபூர்வ பொது அஞ்சலி மற்றும் நினைவு ஊர்வல நிகழ்வுகள் மொன்றியால் நகரின் மையப்பகுதியில் உணர்ச்சிப்பூர்வமாக இடம்பெற்ற போதே, பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தனர்.

ஹெலிஃபாக்ஸ் (Halifax) முதல் மேற்கு வான்கூவர் (West Vancouver) வரை கனடாவின் நாலாபுறங்களிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் வருகை தந்திருந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பழங்குடியின அமைதிப் படையினர் கறுப்புப் பட்டி அணிந்து இந்த மாபெரும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

சென்-உர்பைன் (Saint-Urbain) வீதியில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், ரினே-லெவெஸ்க் (René-Lévesque) அவென்யூ வழியாக நகரின் பிரதான விளையாட்டு மற்றும் கலை அரங்கான ‘பெல் சென்டரை’ (Bell Centre) சென்றடைந்தது.

ஊர்வலத்தின் போது கனேடிய ஆயுதப் படையின் ஹெலிகாப்டர்கள் வான்வெளியில் பறந்து மரியாதை செலுத்தின.

கடந்த 24 ஆண்டுகளில் மொன்றியலில் கடமையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட முதலாவது சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி குளிர்காலத்திற்கான புதிய விமானப் பயண அட்டவணையை  வெளியிட்ட எயார் கனடா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

எல்லை பாதுகாப்பை பலப்படுத்த கனடிய அரசாங்கம் நடவடிக்கை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் லவால் பகுதிக்கு சென்றவர்கள் தடுப்பு ஊசி போடவேண்டும் -சுகாதாரத்துறை

பிப்ரவரி 7, 2025
கியூபெக்

170 ஆண்டு பழமையான Villa Maria College கல்லூரியின் எதிர்காலம் குறித்து இறுதி முடிவு விரைவில்.

மே 13, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் சொகுசு விமான சர்ச்சை – வெளிவந்த உண்மை!

ஏப்ரல் 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?