உலக கோடீஸ்வரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு எதிராக 250,000 குடிமக்கள் மனு கையளித்துள்ளனர்.
எலான் மஸ்க்கின் கனேடிய கடவுச்சீட்டை பறிக்குமாறு கோரி 250,000 குடிமக்கள் கையெழுத்திட்ட மனு நாடாளுமன்றதில் கொடுக்கப்பட்டுள்ளது
டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளராக எலான் மஸ்க் செயற்பட தொடங்கியதன் பின்னர், “கனடா ஒரு உண்மையான நாடல்ல” என்று கூறியதன் பபின்பே கனேடிய மக்கள் அவருக்கு எதிராக குறைக்க கொடுக்க ஆரம்பித்துள்ளனர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் கனடாவுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கவும், அதை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எலான் மஸ்க், ட்ரம்பின் நிர்வாகத்தில் DOGE என ழைக்கப்படும் அரசாங்க செயல்திறன் துறை தலைவராக இருப்பதால், கனேடிய இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறார் என்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, மஸ்க், தனது பணவசதியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி கனேடிய தேர்தல்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் எலென் , மஸ்க்கின் கனேடிய குடியுரிமை நீக்குவது கடினம் எனவும் . கனடாவானது தகவல் மோசடி அல்லது தேசத்துரோக குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டால் மாத்திரமே ஒருவரின் குடியுரிமையை நீக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது