போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தனது போக்கை மாற்றி மீண்டும் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவை மாற்றிக்கொள்ளவும், மார்க் கார்னி லிபரல் தலைவராக இருந்தால் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிட போவதில்லை எனும் முடிவை அறிவித்திருந்தார்.
எதிர் வரும் வெள்ளிக்கிழமை மார்க் கார்னியுடன் இணைந்து ஒரு நிகழ்வில் அனிதா ஆனந்த் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கனடா மற்றும் இங்கிலாந்தில் முன்னாள் மத்திய வங்கியாளரான மார்க் கார்னி, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைத் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான முன்னணி வேட்பாளராக கருதப்படுகிறார்.
லிபரல் கட்ச்சியின் தலைமை வேட்பாளராகக் கருதப்பட்ட அனிதா ஆனந்த், ஜனவரி 11ம் திகதி அன்று கட்சித் தலைமையை நாடப் போவதில்லை என்றும், வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.