Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டிரிஸ்டன் பிரைமோ பொயிட்ராஸ் கொலையுடன் தொடர்புடைய இருவர் கைது

மார்ச் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொமினிகன் குடியரசிற்குச் சுற்றுலா சென்றிருந்த 19 வயது கனேடிய  இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களை அந்த நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கியூபெக்கின் செயின்ட்-ஜூலியன் (Sainte-Julienne) பகுதியைச் சேர்ந்த டிரிஸ்டன் பிரைமோ-பொயிட்ராஸ் (Tristan Primeau-Poitras) என்பவரே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர் ஆவார்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில், டிரிஸ்டன் மற்றும் அவரது 26 வயது சகோதரர் தங்கியிருந்த விடுதியிலிருந்து உணவு வாங்குவதற்காக ஸ்கூட்டர் ஒன்றில் வெளியே சென்றுள்ளனர்.
மீண்டும் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களை வழிமறித்துக் கொள்ளையிட முயன்றுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட மோதலின் போது, கொள்ளையர்களில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டிரிஸ்டனின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தக் கொலை தொடர்பாக 23 மற்றும் 30 வயதுடைய இரண்டு உள்ளூர் இளைஞர்களை, அந்த நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி மொன்றியலுள்ள உயர்நிலைப் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான வன்முறைகள் அதிகரிப்பு
அடுத்த செய்தி கனேடிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மைக்கேல் மா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

வரிவிதிப்பால் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் கனேடியர்கள்!!!

மார்ச் 7, 2025
கனடா

கனடா பல்கலைக்கழகங்களில் அதிகரித்துள்ள யூத விரோத சம்பவங்கள்

ஆகஸ்ட் 8, 2026
கனடாமுதன்மை செய்தி

‘டக்ளஸ் மனநல பல்கலைக்கழக மருத்துவமனையில்’ பெரும் நீர் கசிவினால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் சேதம்

ஜனவரி 28, 2026
கனடாமுதன்மை செய்தி

பசுமை தொட்டியை சேதப்படுத்தும் அணில்கள்

அக்டோபர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?