ரோயல் கனடியன் மோவுண்டன் காவல்துறையின் தகவலின் படி நூற்றுக்கணக்கான கனேடியர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்ததாக கூறப்படும் சாகிப் மனசௌரி (29) மற்றும் மஜடவுளின் அலூச் (31) ஆகிய இரண்டு டொரோண்டோ குடியிருப்பாளர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும் தங்கள் விபரங்களை மறைக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதுடன் தாம் வங்கியிலிருத்து அல்லது அரசாங்கம் மற்றும் பொலிஸில் இருந்து கதைப்பதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வந்துள்ளதாக ரோயல் கனடியன் மோவுண்டன் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களின் வீட்டை கணினி குற்ற புலனாய்வாளர்கள் சோதனை செய்து தொழில்நுட்ப சாதனங்கள் உட்பட பல பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இது போன்ற 570 தொலைபேசி மோசடியாளர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் வெளிக்கொணரப்படுவார்கள் எனவும் ரோயல் கனடியன் மோவுண்டன் காவல்துறை மேலும் கூறியுள்ளது.
இருவரும் கைதுசெய்யப்பட்டு மாப்ளெஹர்ஸ்ட் , வன்னியர் ஆகிய சீர்திருத்த நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மெய்நிகர் வழியாக திங்கட்கிழமை டொரோண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.