கனடாவின் மத்திய அரசாங்கம், வடக்கு ஒன்ராறியோவிற்கான தனது திருத்தப்பட்ட “செழிப்பு மற்றும் வளர்ச்சி வியூகத்தை” (Prosperity and Growth Strategy for Northern Ontario) வெளியிட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் வடக்கு ஒன்ராறியோ பகுதியின் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகளை, பயன்படுத்துவதை இந்த விரிவான திட்டம், நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இத்திட்டம் சுற்றுலாத்துறைக்கு கணிசமான நிதியுதவிகளையும் அறிவித்துள்ளது.
இந்த புதிய வியூகம், வடக்கு ஒன்ராறியோவின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் நிறுவனங்கள், சிறு வணிகங்கள் மற்றும் சமூகக் குழுக்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை முழுமையாகப் புரிந்துகொண்டு ஆதரிப்பதை உறுதி செய்கிறது.
2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு பழைய வியூகத்தின் புதுப்பிப்பு இது என்றும், மாறிவரும் பொருளாதார சூழ்நிலைகள், புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு ஏற்ப இந்த வியூகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகவும் அரசாங்கத் தரப்பு தெரிவிக்கின்றது.


