யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவு பகுதியை சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்த போது, பிரதேச வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள மதகுக்கு அருகில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.
அதில் காயமடைந்த இளைஞனை மீட்டு நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.