இரத்மலானை தர்மாராம வீதி புகையிரத பாதைக்கருகில் இளைஞன் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பில் பொலிஸார் விசாரணை செய்கையில், இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஒரு தரப்பினர் இளைஞரை தாக்கியுள்ளதுடன், இந்த தாக்குதலில் 4 பெண்களும், 2 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றனர்.
