Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவை திருப்பி அனுப்பிய குழுவினர்.

பிப்ரவரி 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(2) மாலை 2.30 மணியளவில் கனிய மணல் ஆராய்ச்சிக்காக குழு ஒன்று நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்துள்ளனர்.

கிராமத்தில் உள்ள எந்த தரப்பிடமும் எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளாமல் சுமார் 20 பேர் அடங்கிய குழுவினர் அவ்விடத்திற்கு வருகை தந்து கனிய மண் ஆராய்ச்சியை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் சந்தேகம் கொண்ட கிராம மக்கள் அவ்விடத்திற்கு சென்று அவர்களுடன் விசாரணைகளை முன்னெடுத்த போது,இதாம் பல்கலைக்கழகத்தில் இருந்து வருகை தந்துள்ளதாகவும், கனியமண் ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆராய்ச்சி வெற்றி பெற்றால் கனிய மணல் அகழ்வு முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அக்கிராம மக்கள் உடனடியாக வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை லக்கோன்ஸ் அடிகளாரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் அருட்தந்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்தார்.

ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவுடன் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவரும் வருகை தந்திருந்தார்.

தாங்கள் உரிய அனுமதியை பெற்று கொண்டு வருகை தந்ததாக குறித்த குழுவினர் தெரிவித்த போதும் எவ்வித அனுமதியும் பெற்றுக் கொள்ளாத நிலையில் அவர்கள் வருகை தந்தமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குறித்த குழுவினர் அங்கிருந்து சென்றனர்.

மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை முன்னெடுத்து வரும் நிலையில் மன்னார் தீவுக்கு வெளியில் பெருநிலப்பரப்பில் குறித்த ஆராய்ச்சி நடவடிக்கை முன்னெடுக்க இருந்தமை அக்கிராம மக்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி வவுனியா சமுதாயப் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் மரநடுகை.
அடுத்த செய்தி பச்சை பப்பாளி ஜூஸ் கொடுக்கும் அற்புத நன்மைகள்….என்னனு பார்க்கலாம் வாங்க….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது

பிப்ரவரி 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட விவசாய குழுக் கூட்டம்

ஜூன் 13, 2025
இலங்கை

யாழில் மணப்பெண் அலங்கார பயிற்சி…

பிப்ரவரி 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக தமிழரசுகட்சியின் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு

ஜூன் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?