பொதுவாக பப்பாளி பழத்தை போல பப்பாளி பழச்சாறும் விரும்பி உட்கொள்ளப்படுகின்றது. ஆனால் பச்சை பப்பாளியையும் சாறாக அரைத்து உட்கொள்ளலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பப்பாளி பழம் பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய ஒரு சத்தான பழம். இதை பலரும் விரும்பி உட்கொகிறார்கள். இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி பலருக்குத் தெரியும். ஆனால், பப்பாளி பழம் போல் பச்சை பப்பாளியும் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டது என்பது பலருக்குத் தெரியாது.
பச்சை பப்பாளி
பப்பாளி பச்சையாக, அதாவது காய் வாட்டாக இருக்கும்போது, அது ஒரு காயாகக் கருதப்படுகிறது. பழுத்த பப்பாளி பழமாக உட்கொள்ளப்படுகின்றது. இந்தியாவின் சில பகுதிகளில், பச்சை பப்பாளியை கறியாக சமைத்தும் உட்கொள்கிறோம். இது சுவையானதாக இருப்பதோடு இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. ஆசிய நாடுகளிலும் பச்சை பப்பாளிக்கு அதிக தேவை உள்ளது.
பொதுவாக பப்பாளி பழத்தை போல பப்பாளி பழச்சாறும் விரும்பி உட்கொள்ளப்படுகின்றது. ஆனால் பச்சை பப்பாளியையும் சாறாக அரைத்து உட்கொள்ளலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பச்சை பப்பாளி சாறு குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பச்சை பப்பாளி சாற்றை ஏன் குடிக்க வேண்டும்? இதில் உள்ள பிரத்யேக நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பச்சை பப்பாளி சாறு குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Immunity: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பச்சை பப்பாளியில் விற்றமின் சி நிறைந்துள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. குளிர்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை வராமல் தடுக்க பச்சை பப்பாளி சாறு மிக நல்லதாக கருதப்படுகின்றது.
Digestion: செரிமானத்தை மேம்படுத்தும்
பச்சை பப்பாளியில் பப்பேன் என்ற நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. பச்சை பப்பாளி சாறு, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற அனைத்து வயிற்றுப் பிரச்சினைகளையும் போக்க உதவுகிறது.
Skin are: சருமத்திற்கு நன்மை பயக்கும்
பச்சை பப்பாளி சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் விற்றமின் சி சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து சரும பாதுகாப்பில் உதவுகின்றன.
Weight Loss: எடை இழப்பில் உதவும்
பச்சை பப்பாளியில் கலோரிகளின் அளவு குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது எடை இழப்புக்கு உதவுகிறது. இந்த சாறு பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கும். இதன் காரணமாக தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
Heart Care: இதய ஆரோக்கியம்
பச்சை பப்பாளி கொழுப்பைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த காய் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் நன்மை பயக்கும். பச்சை பப்பாளி சாறு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.