Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டு நகர் எல்லைக்குள் அடிப்படை வசதிகளின்றி வாழும் மக்களின் அவலநிலை.

பிப்ரவரி 25, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இன்றுவரை மலசலகூடம் கிணறு மின்சாரம் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் 30 குடும்பங்கள் வாழ்ந்துவரும் பாலமீன்மடு மீனவகிராமத்தைச் சேர்ந்த மக்களின் அவல நிலையை அரசியல்வாதிகள் தொடக்கம் அரச அதிகாரிகள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பற்றைக்காடுகளில் மலசலம் கழிக்க செல்லும் பெண்களை வீடீயோ எடுத்து முகநூலில் பதிவிட்டு அச்சுறுத்துவதாக பெண்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த கிராமம் மட்டுநகரில் இருந்து பார்வீதி ஊடாக முகத்துவாரம் வெளிச்ச வீட்டுக்கு அண்மித்த பகுதியில் சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பாலைமீன்மடு மீனவ கிராமத்தில் சுமார் 130 குடும்பங்கள் வாழ்ந்துவந்த நிலையில் கடந்த 2004 ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தால் முற்று முழுதாக பாதிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொண்டது

இந்த நிலையில் இவர்களுக்காக சுவிஸ் கிராமத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டபோதும் சில குடும்பங்களின் பிள்ளைகள் திருமணம் ஆகிய காரணத்தால் பெற்றோர்கள் அங்கிருக்க முடியாமல் வெளியேறவேண்டிய துர்பாக்கிய நிலமை ஏற்பட்டதுடன் சில குடும்பங்களின் பிள்ளைகள் திருமணமாகி பெற்றோருடன் இருக்க முடியாமல் வெளியேற வேண்டிய சூழலில் தாங்கள் இருந்த மீனவர் கிராமத்தில் சென்று குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருந்தபோது அங்கு ஓலைக்குடிசைகளை அமைத்து குடியேறியவர்களை வெளியேறுமாறும் அரச காணி என பிரதேச செயலகம் அறிவித்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தனர். இருந்தபோதும் அவர்கள் எங்கும் செல்லமுடியாததால் தொடர்ந்து அங்கு குடிநீர் கிணறு மற்றும் மலசல கூடம் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழந்துவருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் வாழந்துவரும் அந்த மக்களுக்கு கடந்த 15 வருடத்துக்கு மேலாக காணிக்கான பத்திரம் வழங்கப்படால் உள்ளது அதே நேரத்தில் அந்த கிராமத்துக்கு அருகிலுள்ள அரசகாணிகளை 5 ஏக்கர் தொடக்கம் 50 ஏக்கர்வரை அந்த பகுதியை சேராத செல்வந்தர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் பலர் அத்து மீறி ஏக்கர்கணக்கில் காணிகளை ஆக்கிரமித்துவருகின்றனர். இவர்களுக்கு எதிராக பிரதேச செயலகம் சட்ட நடவடிக்கை எடுக்காது வீடு இன்றிய ஏழைமக்கள் தமது பூர்வீக காணியில் குடியேறியதை அரச அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்துவரும் அந்த மக்கள் நிம்மதியாக மலம்கழிக்க கூட செல்லமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நவீன நூற்றாண்டில் ஒரு மாகநர எல்லைக்குள் இன்றுவரை மலசல கூடம் குடிநீர் மின்சாம் இன்றி வாழந்துவரும் மக்களின் அவல நிலையை யார் தீர்க்கப் போகின்றனர்?

 

முந்தைய செய்தி ஞானசார தேரர் பிணையில் விடுவிப்பு..
அடுத்த செய்தி நெடுந்தீவில் உழவு இயந்திரம் தடம்புரண்டத்தில் இளைஞன் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சிற்றிக் அமிலம் கரைசலை விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம்

ஆகஸ்ட் 22, 2025
இலங்கை

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்

ஜனவரி 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை

பிப்ரவரி 26, 2026
1
இலங்கை

யாழ். திருச்சி விமான சேவை ஆரம்பம்…

மார்ச் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?