குருநகர் முதலாவது குறுக்குத்தெருவில் நீண்ட காலமாக தேங்கிய கழிவு நீர் – தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் நடவடிக்கையால் துப்பரவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குருநகர் முதலாவது குறுக்குத்தெருவில் நீண்ட காலமாக துப்பரவு செய்யப்படாது காணப்பட்ட பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால், மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தொற்று நோய்கள், சுவாச பிரச்சனைகள் உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன.
இந்த விடயத்தை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கவனத்தில் கொண்டு, யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரிடம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் புதன்கிழமை மாநகர ஆணையாளர் நடவடிக்கை எடுத்ததால் துப்பரவு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.