கனடாவில் ஒன்றாரியோ மாகாண பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஊடகங்களின் வாயிலாக போலி தொழில் வாய்ப்பு விளம்பரங்கள் செய்யப்பட்டு மோசடி செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சித்திரம் வரைவதற்கு புகைப்படங்களை வழங்கினால் அதற்கு கொடுப்பனவு வழங்குவதாக கூறி விளம்பரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு மோசடிகள் இடம் பெறுவதாகவும் மேலும் சட்ட விரோத செயற்பாடுகளுடன் இந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இவ்வாறு விளம்பரங்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும் இவ்வாறான விளம்பரங்களின் மூலம் பொருளாதார நிதி நட்டங்கள் ஏற்பட கூடும் எனவும் நிதிச்சலவை போன்ற பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்பு பட வேண்டியும் நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.