மட்டக்களப்பு புன்னைச்சோலை சேமக்காலை 4ம் குறுக்கு வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இரவு குறித்த வீட்டில் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர்.இதன் போது வீட்டின் சமயலறை பகுதி கதவை உடைத்து வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கு அறைகளில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம் மற்றும் சுமார் 33 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து தடவியல் பிரிவு காவல்துறையினர் அழைக்கப்பட்டு தீவிர விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையனிர் மேற்கொண்டு வருகின்றனர்.
