தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை விஜய் நேற்று தொடங்கினார்.
அதன்படி நேற்று காலை நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார்.இதையடுத்து விஜய் பிரசாரத்துக்காக வடிவமைக்கப்பட்ட நவீன ரக பஸ்சில் ஏறி, தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
இந்நிலையில் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விஜய் பரப்புரை குறித்த கேள்விக்கு பதில் அளித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது,
இசை இறைவனாக இளையராஜாவை பார்க்கிறோம். சச்சினுக்கு விருது தரும்போது இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில் எங்களுக்கு பெருமை தான்.
திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும் ரஜினி, அஜித், நயன்தாரா வந்தாலும் விஜய்க்கு வரும் கூட்டத்தைவிட அதிக கூட்டம் வரும்.
நீங்கள் மலையை வெட்டி, கல்லாக்கி உங்கள் பிள்ளைக்கு பெரிய வீட்டை கட்டி வைத்து போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் இந்த நாட்டை எனது பிள்ளைகளுக்கு வாழ்வதற்கு வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் காசு சேர்த்து வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் சுவாசிக்க நல்ல காற்றை சேர்த்து வைத்து விட்டு சாக வேண்டும் என்று நினைக்கிறேன் எனவும் அவர் கூறினார்.
