இந்தியாவின் காஷ்மீரில் அண்மைக் காலமாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் கூறுகையில்,
“நோய் பாதிப்பு தீவிரமாகலாம். ஆனாலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது..
27,809 பேருக்கு நடத்தப்பட்ட டெங்கு பரிசோதனையில் 5,009 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
425 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.