அனைத்து உலக நாடுகளும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் வருவதட்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி தேர்தலானது நடைபெற்ற நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹரிஸும் போட்டியிட்டனர்.
குறித்த தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையில் இருவரும் தீவிரமாக ஈடுப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த தேர்தலில் கமலா ஹரிஸ் தோல்வியை சந்தித்துள்ளதுடன் மீண்டும் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.