சமாதானத்திற்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு நாளை இடம்பெறவுள்ள நிலையில், கொழும்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த நிகழ்வானது கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் மாலை 4 மணியளவில் இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமை தாங்கவுள்ளார்.
எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாளை காலை 11 மணியுடன் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பொரளை சந்தி வரை, பேஸ்லைன் வீதி, மருதானை வீதி, வோர்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர மாவத்தை,ஹோர்டன் சுற்றுவட்டம், சுதந்திர மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ் மற்றும் மார்கஸ் பெர்னாடோ மாவத்தை , நூலக சாந்தி வரை
பித்தல சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, ஸ்டேபில் வீதி மற்றும் கங்காராம விகாரையைச் சுற்றியுள்ள வீதிகள் மூடப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஒரு காலப்பகுதியில் பொதுமக்கள் குறித்த பாதைகளை தவிர்த்து மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
