இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலம், சவாய் மாதோபூர் நகரத்துக்கு அருகில் ரந்தம்பூர் தேசியப் பூங்கா அமைந்துள்ளது.
இப் பூங்காவிலுள்ள புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 25 புலிகள் காணாமல் போயுள்ளதாக தலைமை வனவிலங்கு காப்பாளர் தெரிவித்துள்ளார்.
75 புலிகள் பூங்காவில் இருந்துள்ளன. அதில் மூன்றில் ஒரு பங்கான புலிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை.
இவ்வாறு புலிகள் காணாமல் போயுள்ளமை மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.
புலிகள் காணாமல் போனதற்கு பூங்கா நிறுவனத்தின் அலட்சியம் காரணம் என்றால், குறித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.