இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாகவும் 400இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது
இந்நிலையில் தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரை இலக்கு வைத்து சுமார் 300 இற்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.