தடை செய்யப்பட்ட ஜமாத்-உத்-தவா அமைப்பின் துணைத் தலைவரும், மும்பையில் 2008-ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீத்தின் உறவினருமான ஹஃபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி நேற்றையதினம் பாகிஸ்தானில் உயிரிழந்தார்.
ஹஃபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார். கடந்தாண்டு (2023) இவரை ஐ.நா. உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது.
லாகூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அப்துல் ரஹ்மான் மக்கி நேற்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக ஜமாத்-உத்-தவா அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையின் பல இடங்களை குறிவைத்து லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத குழுவினா் தொடா் தாக்குதலில் ஈடுபட்டனா். நான்கு நாள்கள் நீடித்த இத்தாக்குதல்களில் 175 போ் கொல்லப்பட்டு 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.