Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியா என்றுமே துணை நிற்கும் – சாய் முரளி(Video)

டிசம்பர் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் என்றுமே துணை நிற்பார்கள் என இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (19) வெள்ளிக்கிழமை மதியம் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்எம்.ஆலம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை கையளித்த பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு முதல் கட்டமாக வழங்கும் வகையில் இந்த நிவாரண பொருட்களை கை அளித்துள்ளோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட குறித்த நிவாரண பொருட்கள் மன்னார் மாவட்டத்திற்கும் பங்கிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட புயல் காரணமாக நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நவம்பர் 28 ஆம் திகதி முதல் இந்திய மக்களினதும், அரசாங்கத்தினதும் உதவி ஊடாக இது வரை சுமார் 1700 மெற்றிக் டன்னுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு உள்ளது.

அந்த வரிசையிலே வடக்கு மாகாணத்திற்கும் குறிப்பாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறோம்.

இந்த நிவாரண உதவிகள் மாத்திரமின்றி மன்னார் மாவட்டத்தில் அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள், படகுகள், வெளி இணைப்பு இயந்திரங்கள் போன்றவற்றை வெகு விரைவில் வழங்க உள்ளோம். அதனை வெகு விரைவில் எதிர்பார்க்கலாம்.

இந்திய அரசாங்கம், இந்திய மக்கள்,இந்திய தூதரகமும் என்றும் உங்களுடன் துணை நிற்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா எண்ணெய் பறிமுதல்(Video)
அடுத்த செய்தி யாழில். போதைப்பொருள் பாவனையால் ஒருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

2026ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்!

ஜூலை 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு

செப்டம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பிரதமரின் கலந்துரையாடலின்போது ஆழ்ந்த உறக்கத்தில் கல்வி அதிகாரிகள்!

ஆகஸ்ட் 4, 2025
இலங்கை

மலேசியா திரங்காணு பல்கலைக்கழக விவாத போட்டி – இலங்கை மாணவர்கள் இரண்டாமிடம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?