தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமானம் விபத்தில் 179 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாங்காக்கில் இருந்து 179 mபயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்திற்கு இன்றையதினம் (29-12-2024) விமானம் வந்துள்ளது.
முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானத்தின் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கத்தின் போது விமானம் ஓடுபாதையில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுவரை 179 மபயணிகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது