மெக்சிகோவின் பசுபிக் கடற்கரையில் பகுதியிலிருந்து அகாபுல்கோவிலிருந்து புறப்பட்டு சென்ற சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் அந்நாட்டு கூறுகையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானம் எட்டு பயணிகளையும் , இரண்டு பணியாளர்களையும் ஏற்றிச் சென்ற நிலையில் , விபத்து நடந்த பல மணி நேரத்திற்குப் பிறகு ஏழு உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
