Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் கலந்துரையாடிய கனேடிய பிரதமர் கார்னி…

மே 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் கனேடிய பிரதமர் கார்னியும் இருநாடுகளுக்கும் இடையிலான விவகாரங்கள் குறித்து, தமது மதிய உணவின்போது கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது விதிக்கப்பட்டுவரும் வரிகள், இருநாடுகளுக்கு இடையிலான வெளியுறவுக் கொள்கை மற்றும் கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறுவது பற்றிய டிரம்ப்பின் கருத்து முதலான விடயங்கள் அங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகின்றது.

கனடிய பொருட்கள் மீதான வரிகளை நீக்குமாறு மார்க் கார்னி அமெரிக்க ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.

கனடா நாடானது அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறுவது என்ற கருத்தை, இந்த கலந்துரையாடலின் போது டிரம்ப் முன்வைத்தார்.

எனினும், அச்செயற்பாட்டில் இருதரப்பும் ஒன்றுபட்டால் தான் அது நடைபெறும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து நடந்த மதிய உணவின் போதான உரையாடலின் போது, வெளியுறவுக் கொள்கை சார்ந்த விடயங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர், சீனா – ஈரான், இஸ்ரேல்-காஸா மற்றும் ஏமனில் உள்ள ஹவுதிகள் குறித்து, மார்க் கார்னியின் கருத்தை டிரம்ப் கேட்டறிந்தார்.

போதைப்பொருள் நெருக்கடி குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.

கனடா போதைப்பொருளின் முக்கிய ஆதாரம் அல்ல என்றும் கனடாவின் எல்லைகளில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளைப் பற்றியும் கார்னி அமெரிக்க ஜனாதிபதிக்குத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு சாதனங்களையே கனடா அதிகமாக வாங்குவதை ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.

முந்தைய செய்தி மாணவி அம்சி விடயத்தோடு தொடர்புபட்ட ஆசிரியருக்கு இடம்மாற்றம்…
அடுத்த செய்தி வட அமெரிக்க பாடசாலைகளுக்கு மிரட்டல் கோரிக்கை…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனேடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு தெரிவித்த கருத்துக்கு கலைஞர்கள் கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 1, 2025
முதன்மை செய்தி

புதிய ஊதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள சுகாதார அறிவியல் தொழிற்சங்கம்

ஆகஸ்ட் 15, 2025
கனடா

லிஸ்பனில் நடந்த ரயில் விபத்தில் ஒட்டாவாவைச் சேர்ந்த அசிஸ் பென்ஹாரெஃப் என்பவரும் உயிரிழந்துள்ளார்

செப்டம்பர் 10, 2025
கியூபெக்முதன்மை செய்தி

33 மருத்துவர்கள் ஒரே நேரத்தில் பதவி ராஜினாமா

பிப்ரவரி 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?