Quebec மாகாணத்துக்குரிய இறைமையையும் தன்னாட்சியையும் கோரும் Bloc Quebecois கட்சியின் தலைவர் Yves- François Blanchet, தமது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
எனினும் அவரது கட்சி, இந்த தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய நாட்களில், கனடா ஒரு செயற்கையான நாடு என, சர்ச்சைக்குரிய கருத்தை Blanchet வெளிப்படுத்தியிருந்தார்.
அவருடைய கருத்து கனடாவை இழிவுபடுத்துவதாக, பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
எனினும், Blanchet ” கனடா ஒரு செயற்கையான நாடு ” என்ற தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் தலைமை தாங்கும் கட்சியான Bloc Quebecois, பொதுத்தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.