Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் நடக்கும் இணைய குற்றங்களுக்கு வடக்கிலையே தீர்வு…

ஏப்ரல் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சமூக வலைத்தளம் உள்ளிட்ட இணையத்தளங்களில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு இனி விரைவான தீர்வை வடக்கு மாகாண மக்கள் பெற முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்கான கணிணி குற்றப் புலனாய்வுப் பிரிவு யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பதில் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்படும் பணம் சார்ந்த பிரச்சினைகள், கணக்குகளை முடக்குதல், சமூக வலைத்தள அவதூறுகள், சமூக வலைத்தளங்கள் ஊடான பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட முறைப்பாடுகளை கொழும்புக்கு சென்று முறையிட்டு அதற்கான தீர்வுகளை பெற நீண்ட காலதாமதம் ஆகும்.

ஆகவே வடபகுதி மக்களின் சிரமத்தை தவிக்கும் வகையில் வடக்கு மாகாணத்திலேயே இந்த கணிணி குற்றப் புலனாய்வுப் பிரிவு கிளை அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் மாகாண மட்டத்திலிருந்த குறித்த சேவை தற்போது இனி வரும் காலங்களில் மாவட்ட மட்டங்களுக்கு விரிவாக்கப்படும் ஆகவே பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி இணைய குற்றங்களுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என்றார்.

குறித்த நிகழ்வில் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி வவுனியாவில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு…
அடுத்த செய்தி யாழில். நால்வருக்கு சிக்கன்குனியா பாதிப்பு உறுதி…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!

மே 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். அதிவேகமாக பயணித்த பேருந்து – சாரதி கைது

ஜனவரி 5, 2026
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனம் தமது புதிய படைப்பான ஐபோன் 16 சீரிஷை இன்று வெளியிடுகிறது.

செப்டம்பர் 9, 2024
இலங்கை

மின்சார சபையுடன் இணைந்து செயற்பட முடியாத ஊழியர்கள் சேவையில் இருந்து விலகிக்கொள்ள முடியும்!

செப்டம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?