Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி அனுஷ்டிப்பு

ஜனவரி 31, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக ஊடகவியலாளர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் கறுப்பு ஜனவரி தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று (31) இடம் பெற்றிருந்தது.

ஊடகவியலாளர்களைப் பொறுத்தளவில் ஜனவரி மாதத்தை கருப்பு ஜனவரியாக அனுஷ்டித்து வருகின்றார்கள்.

நீதிக்காக குரல்கொடுத்த சுமார் 50 ஊடகவியலாளர்கள் அரச படைகளால் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை ஜனவரி மாதத்திலேயே இடம் பெற்றிருக்கின்றன அந்த வகையில் ஜனவரி மாதத்தை ஊடகவியலாளர்கள் கருப்பு ஜனவரியாக அனுஷ்டித்து வருகின்றார்கள்

குறித்த மாதத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவு கூறுகின்ற அதே வேளையிலே அவர்களுடைய கொலைகளுக்கு நீதி கோரி தொடர்ச்சியான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இன்று வரை அவர்களுக்கான நீதி கிடைக்காத நிலைமையில் தொடர்ச்சியாகவும் ஊடகவியலாளர்கள் இந்த ஜனவரி மாதத்தை கறுப்பு ஜனவரியாக அனுஷ்டித்து வருகின்றனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலே ஊடகவியலாளர்களுக்கான நினைவு நிகழ்வும் கறுப்பு ஜனவரி துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்வும் முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னதாக முல்லைத்தீவு ஊடக அமையத்திலே திருகோணமலையில் ஜந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் உண்மையை வெளிப்படுத்தியதால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோருடைய நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது

ஊடகவியலாளர்களுக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவு நகரிலும் முல்லைத்தீவு பேருந்து நிலையத்திலும் கறுப்பு ஜனவரி தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்

குறித்த துண்டுப்பிரசுரத்தில் தமிழ் ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் எம்மோடு இருந்திருந்தால் இன்று அவருக்கு 56 வயதாகியிருக்கும். ஆனால், வேதனையளிக்கும் விதத்தில் 20 ஆண்டுகளிற்கு முன்னர் அவரது 36 ஆவது அகவையில் அரச கொலையாளிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

கிழக்கு கடற்கரை நகரான திருகோணமலையில், 2006 ஆம் ஆண்டின் இரண்டாவது நாள். ஐந்து மாணவர்கள் எப்படி படுகொலை செய்யப்பட்டனர் என்பதை மறுக்க முடியாத புகைப்பட ஆதாரத்துடன் அவர் நிரூபித்ததால் அவர் அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த மாணவர்கள் எடுத்துச் சென்ற குண்டு வெடித்ததாலேயே அவர்கள் உயிரிழந்தனர் என்று இலங்கை அரசு கூச்சமின்றி பச்சைப் பொய் கூறியது (அல்லது உண்மையை மூடி மறைக்கும் வகையில் பச்சைப் பொய் கூறியது). ஆனால், சுகிர்தராஜன் உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தினார். இதனாலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 2010 தலைநகரில் அதே ஜனவரி மாதத்தில் கடத்தப்பட்ட பிரகீத் எக்னலிகொட உட்பட பலரும் இதே போன்ற துரப்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள்.

சுகிர்தராஜனிற்கு முன்னரும் பிறகும் இவ்வாறு உண்மைகளை வெளிக்கொண்டுவந்ததனால் வலிந்து காணமால் ஆக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கைகளைக் கூட்டினால் அது 50 ஐ எட்டும். அதில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அதிலும் அதிகளவானாவர்கள் ஜனவரி மாதம் பலியாயினர்.

இதனைவிட ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் பலவும் இடம்பெற்றன இவையும் அதிகளவில் இதே ஜனவரி மாதத்தில் தான் இடம்பெற்றன

இதன் காரணமாக ஜனவரி மாதமே ஊடகவியலாளர்களுக்கு கறுப்பு மாதமாக உள்ளது.

குற்றமிழைத்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாதது மட்டுமின்றி அவர்கள் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுவது. மேலும் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலை நாட்ட தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் எந்த நவடிக்கையும் எடுக்கத் தவறியதால் இன்று முழு நாடும் இருண்டு போயுள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி தேசிய இலக்கியப் போட்டியில் வவுனியா மாணவி முதலிடம்
அடுத்த செய்தி இலங்கையில் பதிவான நில அதிர்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் பெண்களுக்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக கண்டனம்

ஜனவரி 29, 2026
1
இலங்கை

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையை மேம்படுத்துவதற்கான திட்டமுன்மொழிவை சமர்ப்பிக்க பணிப்பு.

பிப்ரவரி 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மல்யுத்தப் போட்டிக்கான தெரிவில் வித்தியானந்தக் கல்லூரி மாணவர்கள் சாதனை

ஏப்ரல் 10, 2026
இலங்கை

வவுனியா அந்தோனியார் ஆலயத்தில் புது வருட ஆராதனை

ஜனவரி 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?