Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசோடு கைகோர்க்கும் வியட்நாம்….

ஏப்ரல் 7, 2025
கியூபெக்
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகளாவிய வர்த்தக சீர்குலைவுகளின் மத்தியில், கியூபெக் மாகாண அரசு, வியட்நாமுடனான தனது உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.

வியட்நாமுடன் விரிவான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில், கியூபெக் தலைவர்கள் தங்கள் உறுதியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கனடாவின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான சந்தைகளை பன்முகப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தகரீதியான முரண் நிலையில், அமெரிக்க சந்தையைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் கனடாவின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவும் இது அமைந்துள்ளது.

கனடாவுக்கான வியட்நாம் தூதுவர் பாம் வின் குவாங் தலைமையிலான வியட்நாமிய தூதரகக் குழுவினருக்கும் கியூபெக் மாகாணத் தலைவர்களுக்கும் இடையில் அண்மையில் இது குறித்த சந்திப்புகள் நிகழ்ந்தன.

அச்சந்திப்புகளின் போது, வியட்நாமுடன் விரிவான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு கியூபெக் தலைவர்கள் தங்கள் உறுதியை வெளிப்படுத்தினர்.

மொண்ட்ரீயல் துறைமுகத்திற்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி கடல் போக்குவரத்து வழித்தடத்தை நிறுவுவதன் முக்கியத்துவம் இச்சந்திப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த கடல் வழித்தடத்தை நிறுவுவதன் மூலம், கடல்வழியாக பொருட்களைக் கொண்டு செய்வதற்கான பயணச் செலவையும் கடற்பயணத்துக்கான காலப் பகுதியையும் கணிசமாகக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் மிகவும் வினைத்திறனான பொருளாதாரப் பிராந்தியங்களுள் ஒன்றாகவுள்ள கியூபெக்கின், சிறப்பான முன்னெடுப்பாக இது நோக்கப்படுகின்றது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாண அரசு வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களை அறிவிக்கவுள்ளது…
அடுத்த செய்தி பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை இரத்து

அக்டோபர் 24, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Côte-des-Neiges துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து

ஜூன் 25, 2026
கனடாமுதன்மை செய்தி

படகுப் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை கணிசமாக அதிகரிக்க கோரிக்கை

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் நுகரப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கீட்டை எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டம்

ஜூலை 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?