பிரதமர் மார்க் கார்னி தனது முதல் சர்வதேச பயணத்தை முடித்து, நாளை செவாய்க்கிழமை நாடு திரும்ப இருக்கும் நிலையில் அமெரிக்க நிர்வாகத்தின் கனடா பற்றிய கருத்துகளுக்கு பதிலளித்தார். அவர், கனடா தனது சொந்த இறையாண்மைக்காக நின்று தன்னுடைய வழி ஒன்றை கடைப்பிடிக்க முடியும் என்று தெரிவித்தார்.
பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கருத்துக்களை கடுமையாக எதிர்த்து, அந்த கருத்துகள் அவமரியாதையானவையாக இருக்கின்றன என்றும், அவை நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை இன்று மதியம் சந்தித்த பின்பு , மார்க் கார்னி லண்டனில் மன்னர் சார்லஸ் மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இன்று திங்கள்கிழமை மாலை சந்தித்து, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதாக கூறினார்.
கனடா தன் இறையாண்மையை சீராக பாதுகாப்பதற்கும், அதன் பாதுகாப்புக்கு சிறந்த முறையில் செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மன்னர் சார்லஸ், டிரம்பின் சொல்லாட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை, ஆனால் அவர் சமீபத்தில் கனடாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பல சைகைகளை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
