மொன்றியலில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மெர்சியர்–ஹோசெலாகா-மைசோன்னியூவில் துவிச்சக்கர வண்டியில் சென்ற நபருடன் STM நகரப் பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
குறித்த விபத்து இன்று காலை 11.30 அளவில் இடம்பெற்றுள்ளது
லா ஃபோன்டைனில் La Fontaine ல். மேற்கு நோக்கிக் கடந்து சென்ற சைக்கிள் ஓட்டுநர் மோதியபோது, பை-ஐஎக்ஸ்(By-IX) பகுதியில் பேருந்து தெற்கு நோக்கிச் சென்றதாக நேரில் கண்ட சாட்சிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
BRT எனப்படும் பேருந்துகளுக்கான BY IX எனப்படும் விரைவுப் போக்குவரத்து வழித்தடத்தின் நீட்டிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், விபத்து நடந்த பகுதியில் வேலி மற்றும் கட்டுமான பொருட்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி செலுத்திய நபர் 89 வயதானவர் எனவும் , சிவப்பு எச்சரிக்கை விளக்கு எரிந்தபோது வீதியை கடந்ததாகக் போலீசார் தெரிவித்துள்ளனர்
விபத்தில் பாதிக்கப்பட்ட 89வயதுடைய நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 49 வயதான பேருந்து ஓட்டுநர் “பதட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மொன்றியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.